என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரன்தீப் சுர்ஜேவாலா
நீங்கள் தேடியது "ரன்தீப் சுர்ஜேவாலா"
மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது. #Modi #RandeepSujewala
புதுடெல்லி:
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று உரையாற்றினார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடியின் சுதந்திர தின உரை வெற்று முழக்கம் என்பதை நிரூபிப்பதாக உள்ளது. அவர் தனது ஆட்சியின் ஊழல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதையும் கூறவில்லை. அதேபோல் வியாபம் மற்றும் பொது வினியோகத் திட்டத்தில் நடந்த ஊழல் பற்றியும் சொல்லவில்லை.
டோக்லாமில் சீனப் படைகள் ஊடுருவல் முயற்சி குறித்து எதையும் குறிப்பிடவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி ஒரு வார்த்தை கூட அவருடைய உரையில் காணப்படவில்லை. நாட்டில் நிலவிவரும் வெறுப்பு அரசியல் பற்றியும் அவர் பேசவில்லை. ஒட்டுமொத்தத்தில் சாதாரண மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக அவர் எதையும் கூறவில்லை. அவருடைய உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
நாட்டு மக்கள் நல்ல நாட்களுக்காக காத்திருக்கிறார்கள். மோடி, பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டால் அந்த நல்ல நாட்கள் தானாக வந்துவிடும்.
2013-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சத்தீஷ்காரில் டெல்லி செங்கோட்டை போல் அமைத்த மேடையில் தன்னுடன் விவாதிக்க தயாரா என்று மோடி சவால் விடுத்தார்.
இன்றோ, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளின் துயரம், அரசின் ஊழல் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என்று ராகுல்காந்தி சவால் விடுத்தும் அதுபற்றி மோடி பேச மறுக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், “பிரதமரின் சுதந்திர தின உரை தேர்தல் கால அரசியல் பேச்சு போலவே உள்ளது. நாட்டு மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க அவர் தவறிவிட்டார். டெல்லி செங்கோட்டையை சொந்த நலனுக்காக அரசியல் மேடையாக அவர் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது” என்றார். #Modi #RandeepSujewala #Tamilnews

×

X